அட....இனி பிக் பஸ் அல்டிமேட்ட தொகுத்து வழங்க போறது இந்த நடிகரா?...
தமிழில் விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதனை பிரபல நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.
மொத்தம் 5 சீசன்கள் நடந்து முடிந்த நிலையில் கடைசியாக நடந்த சீசன் 5 ல் ராஜூ , பாவனி, பிரியங்கா, தாமரை,நமீதா,இம்மான் அண்ணாச்சி,நிரூப், சிபி, வருண், அக்சரா , அபினய் , ஐயக்கி, இசைவாணி, மதுமிதா, சின்னப்பொண்ணு, சுருதி, நாடியா,அபிஷேக் உள்ளிட்ட 18 பேருடன் விறுவிறுப்பாக தொடங்கியது பின் சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தனர். பரபரப்பாக நடந்த இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய ராஜு முதல் பரிசை தட்டி சென்றார்.பிக் பாஸ் சீசன் 5 வின்னர் ராஜுவும் இரண்டாம் இடத்தை பிரியங்காவும் தட்டி சென்றனர்.
இந்நிலையில் 24 மணி நேரமும் கண்டுக்களிக்கும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த ஜனவரி 30 முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் கடந்த பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் 14 பேரை கொண்டு ஆரம்பமானது.
இந்த சீசன்-1 ல் அனிதா, அபிநய் , அபிராமி, ஷாரிக், சுஜா, தாடி பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, தாமரை, வனிதா,பாலாஜி,நிரூப் , சுருதி, சினேகன், ஜூலி ஆகிய 14 பேர் கொண்டு ஆரம்பித்த நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய் ,ஷாரிக், சுஜாவருணி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் சில காரங்களால் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து யார் இதனை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அதனை reveal செய்துள்ளது விஜய் டிவி. அது நம்ம சிலம்பரசன் T.R தான்.
ConversionConversion EmoticonEmoticon