சமூக வலைதளங்களில் வைரலாகும் யுவனின் டீ - ஷர்ட்...அப்படி என்ன தான் இருக்கு அதுல...
தமிழ் சினிமாவில் முன்னனி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜாஆவார். இவர் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.
இவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான அரவிந்தன் திரைபடத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
தொடக்கத்தில் நிறைய தோல்விகளை சந்தித்தாலும் தன்னுடைய விடா முயற்சியால் இசையில் பல சாதனைகளை புரிந்தார். இன்று இவரின் இசைக்கு அடிமை ஆகாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்...
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி -2 படத்தில் இவர் இசையில் உருவான ரவுடி பேபி பாடல் உலக அளவில் பிரபலம் அடைந்தது. யு ட்யூபில் 94.5 மில்லியன் பேர் பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று அவர் தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து இருந்தார்.
அதில் இவருடன் மெட்ரோ மற்றும் ராஜா ரங்கூஸ்கி படத்தில் கதாநாயகனாக நடித்த ஷிரிஷ் உள்ளார்.அதில் யுவன் அணிந்து இருக்கும் டீ-ஷர்டில் "I am a தமிழ் பேசும் Indian" என்றும்...ஷிரிஷ் அணிந்து இருக்கும் டீ-ஷிர்டில் "Hindi Theriyathu Poda " என்றும் எழுதி இருந்தது...இதற்கு ரசிகர்கள் பல்வேறு விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்..இது இப்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
மேலும் இதனை மக்களவை உறுப்பினர் மற்றும் தி.மு.க வின் மகளிரணி தலைவருமான கனிமொழி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை ரீடிவீட் செய்துள்ளார்.
இதே போல் இயக்குனர் பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு மற்றும் அவருடைய மனைவி kiki இருவரும் இதே போல் உடை அணிந்து தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளனர்..





1 Comments:
Click here for CommentsAmazing!!
ConversionConversion EmoticonEmoticon