இந்த கோவிட் நேரத்துல அவசர வேலையாக வெளியூர் போகணுமா?...இத படிங்க முதல்ல...
"கொரோனா"
உலகத்தையே அச்சுறுத்தும் ஒரு வார்த்தை... உலகத்தையே புரட்டிப்போட், போட்டு கொண்டிருக்கும் ஒரு கொடிய வைரஸ்.பல உயிர்களை பலி கண்டது...
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை சாதாரணமாக நினைத்த ஒரு வைரஸ் இன்று மொத்த உலகையும் புரட்டி போட்டு கொண்டு இருக்கிறது.அனைத்து நாடுகளும் செய்வதறியாது புலம்பி கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸை அழிக்க பல்வேறு வழிகளை தேடிக்கொண்டிருந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு வெகுவாக குறைந்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் அலையை ஆரம்பித்தது...
கடந்த முறையை விட பல மடங்கு அதிக மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்..பல முக்கிய பிரமுகர்கள், திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்களும் பாதிக்க பட்டனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பலபேர் உயிர் இழந்தனர்.
கொரோனவால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொ
ண்டிருக்கும் இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த மே 10ம் தேதி முதல் மே 24 வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை கொண்டு வந்தது...
மேலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
இதில் முக்கியமான ஒன்று E -PASS. அவசர மற்றும் முக்கிய விடயங்களுக்காக வெளியூர் செல்ல விரும்புவோர் நிச்சயம் "E -Pass" apply செய்து மட்டுமே செல்ல இயலும்.
"E -PASS " Apply செய்ய விரும்புவோர் " E-Pass " இந்த லிங்க் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் இன்று (17-05-2021) 20,486 பேர் குணமடைந்தனர் மற்றும் 2,31,596 பேர் பாதிக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

ConversionConversion EmoticonEmoticon