கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 10.25 லட்சம் வழங்கினார் நடிகர் சூரி.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை ஆரம்பித்து லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பல திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தின் முதல்வராக திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் கடந்த மே 7ம் தேதி பதவியேற்று பல்வேறு நல திட்டங்களை அறிவித்திருந்த நிலையில்
கொரோனா நல திட்டங்களையும் அறிவித்தார். அதற்காக நிதிகளை பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெற முதல்வரின் பொது நிவாரண நிதி என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இதில் பலர் நிதி அளித்து வருகின்றனர்.
இதற்காக நடிகர் சூரி அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், தன் மகள் வெண்ணிலா - மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று திரு. உதயநிதி ஸ்டாலின் M.L.A அவர்களிடம் வழங்கினார்.
இதனை திரு. உதயநிதி ஸ்டாலின் M.L.A அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
நடிகர் அண்ணன் @sooriofficial அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், தன் மகள் வெண்ணிலா - மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். சூரி அண்ணன் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும். pic.twitter.com/uoAoFSFSCX
— Udhay (@Udhaystalin) June 3, 2021


ConversionConversion EmoticonEmoticon