சமந்தாவின் புதிய காதல் கதை

சமந்தாவின் புதிய காதல் கதை

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா அக்கினேனி.

இவர் தமிழில் மாஸ்க்கோவின்  காவிரி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.பின்பு தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 

பின்பு இதன் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நாகா சைதன்யா உடன் ஜோடி சேர்ந்தார். இப்படம் மாபெரும் வெற்றி அடையவே சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின...மேலும் இவர் நடித்த அனைத்து படங்களும் சக்கைப்போடு போடவே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்தார்.

பின்பு இவரும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகருமான  நாக சைதன்யாவும்  காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரும் இவர்களின்  காதலுக்கு பச்சை கொடி காட்டவே,கடந்த 2017ம் ஆண்டு கோவாவில் இவர்கள் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.        

இந்நிலையில் அவர் பெரிய அறிவிப்பை வெளியிட போவதாக நேற்று (04/செப்) தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.என்ன அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள், திரைஉலகினார்கள்  அனைவரும் ஆவலாக இருந்த நிலையில் இன்று அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஆம், அவரின் நீண்ட நாள் கனவான பேஷன் ஷாப் ஒன்றை கூடிய விரைவில் தொடங்க இருப்பதாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதற்கு "SA-AKI" என்று பெயர் வைத்துள்ளனர்...SA - AKI என்பது சமந்தா அக்கினேனி என்பதன் சுருக்கமாகும்.

                

காத்திருப்போம்.....

வாழ்த்துக்கள் சமந்தா அக்கினேனி....

Previous
Next Post »