சந்தோஷத்தின் உச்சத்தில் சிவகார்த்திகேயன்...
தமிழ்நட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பான கலக்கபோவது யாரு மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கி பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி நம் -1 மற்றும் சிரிச்சா போச்சு முதலிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்...
பின்பு இவர் பசங்க திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா திரைப்படம் மூலம் பெரிய திரையில் அறிமுகம் ஆனார்..
இவர் நடித்து வெளியான எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, ரஜினி முருகன் மற்றும் வேலைக்காரன் ஆகிய படஙகள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன....
இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான "Power Star" பவன் கல்யாண் அவர்கள் கடந்த செப்டம்பர் 2 அன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.
பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில்...சிவகார்த்திகேயன் அவர்களும் தனது Twitter பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்...
இதற்கு நன்றி தெரிவித்தது மட்டும் அல்லாமல் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் "ஊதா கலர் ரிப்பன்" பாடலை அவர் பலமுறை பார்த்து ரசித்ததாக பதில் அளிக்கவே சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்....
மேலும் இதற்கு உற்சாகமாக நன்றி தெரிவித்து அதனை Retweet செய்துள்ளார்....
மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் lockdown முடிந்தவுடன் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது...




ConversionConversion EmoticonEmoticon