கோவின் இணையதளத்தில் 2 நாட்களில் தமிழ் மொழியிலும் பதிவு செய்ய வசதி - மத்திய அரசு.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் தற்போது அறிவுறுத்தபட்டுள்ளது. கூட்ட நெரிசலை தடுக்க மத்திய அரசு கோவின் (CoWin) என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது.
இதில் பதிவு செய்த உடன் நாம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள செல்ல வேண்டிய இடம், நேரம் ஆகியவை குறிப்பிட்டு இருக்கும். இதனால் மிகுதியான கூட்டநெரிசல் குறைந்தது. இந்த இணையதளத்தில் பதிவு செய்ய முடியாதவர்கள் நேரடியாக தடுப்பூசி செலுத்தும் இடங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும்.
இந்நிலையில் இந்த இணையத்ததில் பதிவுசெய்யும் மொழிகளில் தமிழ் இடம் பெறவில்லை எனவும் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாகவும் பலர் தெரிவித்து இருந்தனர். இதனால் இன்னும் இரு தினங்களில் தமிழ் மொழியும் இடம் பெரும் எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ConversionConversion EmoticonEmoticon