தனுஷ் படத்தில் இருந்து இயக்குனர் விலகினாரா? படக்குழு விளக்கம்
தனுஷ் அடுத்து நடித்து வரும் படத்தை "துருவங்கள் 16", "மாஃபியா - சாப்டர்-1" ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது மற்றும் G.V. பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
தனுஷ் "தி க்ரெ மேன்" என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்து தற்போது பெயரிடப்படாத இந்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து கார்த்திக் நரேன் விலகி இருப்பதாகவும் மேலும் தனுஷே இந்த படத்தை இயக்கி வருவதாகவும் கூறப்பட்டது.இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்த படத்தை கார்த்திக் நரேன் தான் இயக்கி வருவதாக கூறியுள்ளனர்.



ConversionConversion EmoticonEmoticon